முகப்புபாலிவுட்

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் - அமிதாப் பச்சன்

  | February 18, 2019 11:48 IST
Amitab Bachchan

துனுக்குகள்

 • பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார்
 • பிங்க் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
 • இவர் அரசியலுக்கு வருவதாக சமீபத்தில் புரளி கிளம்பியது.
காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தாக்குதலில் தன்னுயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு  திரையுலகை சேர்ந்த பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
 
இந்த தாக்குதலில் தமிழக வீரர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் இந்த தாக்குதலில் உயிர்நீத்துள்ளனர். அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ.20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இரண்டு வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ஒரு லட்சம் அறிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்கொலைப்படை தாக்குதலில் உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க - "வீரர்களை இழந்து வாழும் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் அறிவிப்பு"

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com