முகப்புபாலிவுட்

சுஷாந்த்தின் கடைசி பட ரிலீஸ் தேதியை அறிவித்த ஏ.ஆர். ரகுமான்.! #DilBechara

  | June 25, 2020 21:37 IST
Ar Rahman

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரபு அனைவரின் மனதிலும் பொதித்து, என்றென்றும் மதிக்கப்படுவார் - ஏ.ஆர்.ஆர்

எம்.எஸ். தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி படப் புகழ் நடிகர் சுஷாந்த் கடைசியாக அறிமுக இயக்குநர் முகேஷ் சாப்ரா இயக்கத்தில் ‘தில் பெச்சாரா' படத்தில் நடித்து முடித்தார். இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சஞ்சனா சங்கி கதாநாயகியாகவும், சைஃப் அலிகான், மிலிந்த் குனாஜி, ஜாவேத் ஜாஃப்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சுஷாந்த் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தற்கொலை செய்து காலமானார் என்பது அனைவருக்கும் தெரியும். இது அவரது ஏராளமான ரசிகர்களையும் பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 34 வயதான நட்சத்திரம் தீவிர நடவடிக்கை எடுக்க காரணங்கள் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப்ப்பதிவு செய்யப்பட்டு, பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுவருகிறது.

pevh2j18

இந்நிலையில், சுஷாந்த்தின் ‘தில் பெச்சாரா' வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும்  ரசிகர்களுக்கு, ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் ஜூலை 24 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

இந்த சிறப்பான தகவலை, ஏ.ஆர். ரகுமான் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். “மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரபு அனைவரின் மனதிலும் பொதித்து, என்றென்றும் மதிக்கப்படுவார். ஜூலை 24 அன்று டிஸ்னி பிளஸ்ஸில் அனைவருக்காகவும் ‘தில் பேச்சரா' வருகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com