முகப்புபாலிவுட்

ரசிகர்களின் நலன் கருதி ஏ.ஆர். ரகுமான் எடுத்த முடிவு..!

  | March 27, 2020 12:25 IST
Ar Rahman

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பரவிவரும் நிலையில் ஏ.ஆர். ரகுமான் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தற்போது விக்ரமின் 'கோப்ரா', சிவகார்த்திகேயனின் 'அயலான்' மற்றும் மணி ரத்னத்தின் 'பொன்னியன் செல்வன்' உள்ளிட்ட பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவர் அடுத்த சில மாதங்களில் லைவ் இசை நிகழ்ச்சிகளுக்காக வட அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தரும் செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரகுமான் தனது ட்வீட்டில் "உலகெங்கிலும் உள்ள என் விசுவாசமான ரசிகர்களுடன் எனது இசையைப் பகிர்வதை விட எனக்கு வேறு எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, இது நம் வீடுகளில் நம் குடும்பங்களுடன் இருக்க வேண்டிய தருணம். எனவே எனது ரசிகர்கள், எனது குடும்பம் மற்றும் எனது இசைக்குழு ஆகியோரின் ஆரோக்கியம் மற்றும் நலன் கருதி, மே & ஜூன் வட அமெரிக்க சுற்றுப்பயணத்தை (North America Tour 2020) அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கிறேன். அந்த நேரத்தில் எங்கள் இசை மற்றும் சமூகத்தை மீண்டும் பகிர்ந்து கொள்ள நாம் ஒன்றாக வரலாம். காலப்போக்கில் நான் உங்களுக்கு அப்டேட் அளிப்பேன் என்பதில் உறுதியாக இருப்பேன், நான் அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பரவிவரும் நிலையில் ஏ.ஆர். ரகுமான் இந்த முடிவை எடுத்துள்ளார்.     விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com