முகப்புபாலிவுட்

ஆஸ்கர் விருது பெறுவதற்காக பட்டினியாக இருந்தேன்: ஏ.ஆர்.ரகுமான்

  | February 06, 2019 12:30 IST (Mumbai)
Ar Rahman

ஸ்லம்டாக் மில்லினியர் ஆஸ்கர் விருது பெற்று 10 வருடம் நிறைவு பெற்ற நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான்

துனுக்குகள்

  • திரைப்படம் மற்றும் பாடலுக்காக ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கர் விருது பெற்றார்
  • ஆஸ்கர் வாங்கும் போது அவரது மனநிலை என்ன என ரகுமானிடம் கேட்கப்பட்டது.
  • குல்சார் மற்றும் அனில் கபூர் உடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

'ஸ்லம்டாக் மில்லினியர்' திரைப்படம் மற்றும் 'ஜெய் ஹோ' பாடலுக்காக ஏ.ஆர்.ரகுமான், 2009-ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார். இதன்மூலம் ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் முதல் இந்தியர் என்ற பெரும் வரலாற்றை ஏ.ஆர்.ரகுமான் படைத்தார். 

ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று பத்து ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் குல்சார், பாடகர்கள் சுக்விந்தர் சிங், மஹாலக்‌ஷ்மி ஐயர், விஜய் பிரகாஷ், நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது ரகுமானிடம், ஆஸ்கர் விருது பெறும் நேரத்தில் உங்கள் மனநிலை என்னவாக இருந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரகுமான் எதுவும் இல்லை, விழாவில் ஒல்லியாக தெரிய வேண்டும் என நான் பட்டினியாக இருந்தேன் என்றார்.
2011ல் டேனி பாயிலின் 127 ஹவர்ஸ் திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ஏ.ஆர்.ரகுமான் பெயர் இடம்பெற்றது. இதுதொடர்பாக ஆஸ்கர் புகழுடன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வது உங்களுக்கு கடினமாக இருந்ததா? ஆம். அது எனக்கு மிகப்பெரிய அடையாளம். ஹாலிவுட்டில் அந்த அடையாளம் எனக்குத் தேவைப்பட்டது. இப்போது எங்கெல்லாம் நான் குறிப்பிடப்படுகிறேனோ, அங்குள்ள மக்களுக்கெல்லாம் என் பெயர் தெரிந்திருக்கிறது என்றார்.

மேலும், இசையில் மட்டும் என்னை முன்னேற்றவில்லை. படங்களைத் தயாரிப்பதிலும் வர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களில் ஈடுபடுவதிலும் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது என்று அவர் கூறினார்.      விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்