முகப்புபாலிவுட்

ரொமாண்டிக் இயக்குநரான சல்மான் கான்; வைரலாகும் ‘Tere Bina’ பாடல் வீடியோ.!

  | May 13, 2020 18:56 IST
Tere Bina

சல்மான் கான் தனது சொந்த குரலில் பாடி, இயக்கி நடித்துள்ள இப்பாடல் இப்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்குவதில் மிகவும் பிரபலமான பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்' நடிகர் சல்மான் கான், கடைசியாக பிரபு தேவா இயக்கத்தில் ‘தபாங்க்-3' படத்தில் திரையில் காணப்பட்டார். இப்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள கட்டாய பூட்டுதல் கட்டத்தின் மத்தியில், ஒரு இயக்குனராக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் சல்லு பாய்.

சல்மான் கான் தனது யூடியூப் சேனலில் ‘தேரே பினா' என்ற மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார், சல்மான் கான் இயக்கிய இந்த வீடியோ சல்மான் மற்றும் அவரது குழுவினரால் அவரது Panvel பண்ணை வீட்டில் கொரோனா வைரஸ் பூட்டுதலின்போது படமாக்கப்பட்டது. மேலும் இந்த வீடியோவில் சல்மான் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார், மேலும் இந்த பாடலில் காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காதலர்களுக்கு இடையே உள்ள அழகிய தருணங்கள் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலில், சல்மான் மற்றும் ஜாக்குலின் குதிரை, ஜீப் மற்றும் ஒரு பைக் சவாரிகள் செய்கிறார்கள். சல்மான் கான் தனது சொந்த குரலில் பாடி, இயக்கி நடித்துள்ள இப்பாடல் இப்போது இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com