முகப்புபாலிவுட்

மீண்டும் இயக்குநர் பால்கியுடன் கூட்டணி சேர்ந்த PC ஶ்ரீராம்!

  | May 21, 2020 13:53 IST
Director Balki

இதுவரை பால்கியுடன் சீனி கம், பா, ஷமிதாப், கி அண்ட் கா மற்றும் ‘பேட் மேன்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்திய சினிமாவின் மிகப் பெரிய வெற்றித் திரைப்படங்கள் மற்றும் மறக்கமுடியாத திரைப்படங்களின் ஒரு பகுதியாக அறியப்படுபவர். மணிரத்னம், சங்கர் போன்ற சிறந்த இயக்குநர்களுடன் பல ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.  மேலும் மீரா, குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

பி.சி.ஸ்ரீராம் பல பாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக ‘சீனி கம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், இயக்குநர் பால்கியுடன் ‘பா', ‘ஷமிதாப்' உட்பட, கடைசியாக வெளியான ‘பேட் மேன்' வரை தொடர்ந்து பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இப்போது, பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவின் மூலம் பால்கியுடன் தனது அடுத்த படத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

பால்கியுடனான ஒரு FaceTime உரையாடலின் சிறிய வீடியோவை வெளியிட்ட பி.சி. ஶ்ரீராம் “நாள் 56, குவாரண்டைன் நாட்கள். எங்களது அடுத்த திட்டத்தைப் பற்றி இயக்குநர் பால்கி உடன் FaceTime-ல் கலந்துரையாடல்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் விக்ரம் குமார் மற்றும் வெங்கி அட்லூரி ஆகியோருடனான் பேஸ்டைம் வீடியோக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com