முகப்புபாலிவுட்

'தொடர்ந்து பரவும் கொரோனா' - உடல்நலனைக் காக்க கத்ரீனா வெளியிட்ட வீடியோ

  | March 18, 2020 15:42 IST
Corona

துனுக்குகள்

  • படப்பிடிப்புகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
  • நோய் பரவாமல் இருக்கப் பல வகையான நடவடிக்கைகளை
  • உடலை சீராக வைத்துக்கொள்ள மேற்கொள்ளவேண்டிய
உலகம் முழுதும் சுமார் 6000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளது கொரோனா நோய்த் தொற்று, இந்தியாவைப் பொறுத்தவரை 100-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் தாக்கத்தால் மூன்று பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் இந்த நோய் பரவாமல் இருக்கப் பல வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

தமிழகத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கடுமையான சூழ்நிலையில் மக்கள் வெளியில் செல்லாமலே தங்களது உடலை சீராக வைத்துக்கொள்ள மேற்கொள்ளவேண்டிய சில உடற்பயிற்சிகளைப் பிரபல நடிகை கத்ரீனா கெய்ப் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

கொரோனா காரணமாக வரும் மார்ச் மாதம் 31ம் தேதி வரை படப்பிடிப்புகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்