முகப்புபாலிவுட்

கேங்க்ஸ்டராக நடிக்கும் தீபிகா படுகோன்

  | February 17, 2018 12:43 IST
Deepika Padukone

துனுக்குகள்

  • `பத்மாவத்' படத்தின் மூலம் பல சர்ச்சைகளை சந்தித்தார் தீபிகா
  • இந்தப் படத்துக்குப் பிறகு `ராணி' படத்தில் நடிக்கிறார்
  • இப்படத்தை இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்குகிறார்
மிகுந்த சர்ச்சைகளுக்கு நடுவே வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது தீபிகா படுகோன் நடித்த 'பத்மாவத்'. இந்தப் படத்துக்குப் பிறகு தீபிகா நடிக்க இருக்கும் படத்தின் பெயர் 'ராணி'. இதில் இவருடன் இர்ஃபான் கானும் நடிக்கிறாராம்.

'ஓம் காரா', 'ஹைதர்', 'ரங்கூன்' போன்ற படங்களை இயக்கிய விஷால் பரத்வாஜ் இப்படத்தை இயக்குகிறார். எண்பதுகளில் மும்பையில் மாஃபியா குயின் என சொல்லப்பட்ட லேடி கேங்க்ஸ்டர் சப்னா தீதியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக இருக்கிறது இப்படம். இதில் சப்னா தீதியாக தீபிகா படுகோனும், அவரது கணவர் காளியா கதாபாத்திரத்தில் இர்ஃபான் கானும் நடிக்கிறார்கள். 'பிக்கு' படத்திற்குப் பிறகு இப்படத்தின் மூலம் இணைகிறது இந்த ஜோடி.

இந்தப் படத்துக்கான முன்தயாரிப்புகளில் ஈடுபட்டிருக்கிறாராம் தீபிகா. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள் படக் குழுவினர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்