முகப்புபாலிவுட்

3D தொழிநுட்பத்தில் தேவதாஸ்

  | June 13, 2017 16:32 IST
Movies

துனுக்குகள்

  • கடந்த 2002 தேவதாஸ் படம் ஹிந்தி மொழியில் வெளியானது
  • பிரபல இயக்குநர் சஞ்சய் லிலா பன்ஷாலி இப்படத்தை இயக்கி இருந்தார்
  • பல விருதுகளை குவித்தது இப்படம்
பாலிவுட் உலகில் 'கிங் கான்' என்றும் SRK என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், 'பேரழகி' நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் நடிகை மாதுரி தீக்ஷித் இணைந்து நடித்த திரைப்படமான 'தேவதாஸ்', தற்போது 3 D தொழில்நுட்ப வடிவில் மீண்டும் வெளியாக உள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் சஞ்சய் லீலா பன்ஷாலியின் இயக்கத்தில் சென்ற 2002ஆம் வருடம் மிகப்பிரமணடமாக வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 'தேவதாஸ்' திரைப்படம் தற்போது மீண்டும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவதாஸ்-பார்வதி காதல் கதையை மையமாகக் கொண்டு உருவான 'தேவதாஸ்' திரைப்படத்தில் நடிகர் ஜாக்கி ஷெராஃப், நடிகர் கிரண் கேர் உள்ளிட்ட நடிகர்கள் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படம் தற்போது 3D தொழில்நுட்ப வடிவில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தேவதாஸ் திரைப்பட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்