முகப்புபாலிவுட்

பாலிவுட் படத்தில் சிறப்புப் தோற்றத்தில் தோனி!

  | September 27, 2019 12:25 IST
Dhoni

துனுக்குகள்

  • தோனி நடிக்கும் முதல் படம் இதுவே
  • சமீபத்தில் தோனி இராணுவத்தில் சில பயிற்சிகளை பெற்றார்
  • தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
பாலிவுட் படத்தில் சிறப்புப் தோற்றத்தில் தோணி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமாகியதோனி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடருக்கு பின்னர் இதுவரை வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளி வந்துக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தோனியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக எடுக்கப்பட்டு அப்படம் மாபெறும் வெற்றிப்படமாக அமைந்தது.

பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்த தோனி தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி சஞ்சய்தத், இம்ரான் ஹாஸ்மி, சுனில் ஷெட்டி ஆகியோர் நடிக்கவுள்ள ஒரு படத்தில் தோனி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கிரிகெட் விளையாட்டு வீரர் தோனி சமீபத்தில் இந்தியா இராணுவத்தில் சில பயிற்சிகளை மோற்கொண்டு முடித்து விட்டு வந்தார். இதனை அடுத்து இந்த படத்தில் இவர் இணைவதாக கூறப்படுகிறது. இதுவரை விளையாட்டு வீரராக மட்டுமே அறியப்பட்ட தோனி நடிகராகவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்