முகப்புபாலிவுட்

துல்கர் சல்மானின் ஹிந்தி படமான ‘கர்வான்’ ரிலீஸ் ப்ளான்

  | January 24, 2018 11:09 IST
Karwaan Movie

துனுக்குகள்

  • துல்கர் சல்மான் ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்
  • முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்துள்ளார்
  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது
பீஜாய் நம்பியாரின் ‘சோலோ’ படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஹிந்தி படம் ‘கர்வான்’ (KARWAAN). இப்படத்தை அகர்ஷ் ஹூரானா (AKARSH KHURANA) என்பவர் இயக்கி வருகிறார். இது தான் துல்கர் சல்மான் பாலிவுட்டில் என்ட்ரியாகும் முதல் படமாம். ஹீரோயினாக மிதிலா பால்கர் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் இர்ஃபான் கான் நடித்துள்ளாராம். இதனை ‘RSVP மூவீஸ் – ISHKA ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. சமீபத்தில், இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், படத்தை இந்தாண்டு (2018) ஜூன் மாதம் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நடிகர் துல்கர் சல்மானே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்