முகப்புபாலிவுட்

துல்கர் சல்மானின் பாலிவுட் பட டைட்டில்

  | September 04, 2017 11:41 IST
Karwaan Movie

துனுக்குகள்

  • மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான்
  • துல்கர் சல்மான் கைவசம் 6 படங்கள் உள்ளது
  • துல்கர் சல்மான் ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம்
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் மலையாள படம் ‘செகண்ட் ஷோ’. இதனைத் தொடர்ந்து துல்கர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. மேலும், தமிழிலும் ‘வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஏற்கெனவே, துல்கர் சல்மான் கைவசம் 5 படங்கள் உள்ளது.

இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். பாலிவுட் படமான இதனை ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கிறாராம். இந்த படம் துல்கர் சல்மான் ஹிந்தியில் அறிமுகமாகும் முதல் படமாம். முதலில் துல்கரின் ரோலில் நடிக்க அபிஷேக் பச்சனை இயக்குநர் அணுகினார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அபிஷேக் பச்சன் விலகினார்.

துல்கருடன், இர்ஃபான் கான் மற்றும் மிதிலா பால்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை அகர்ஷ் ஹூரானா (AKARSH KHURANA) என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் ஊட்டியில் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இதற்கு ‘கர்வான்’ (KARWAAN) என டைட்டில் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்