முகப்புபாலிவுட்

திகில் பட இயக்குநர் திடீர் மரணம்! திரை பிரபலங்கள் இரங்கல்!

  | September 20, 2019 11:05 IST
Shyam Ramsay

துனுக்குகள்

 • ஷியாம் ராம்சேவுக்கு வயது 67.
 • இவர் 20வதுக்கும் மேற்பட்ட பேய் படங்களை இயக்கியுள்ளார்.
 • உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
இந்தி திரையுலகில் திகில் படங்களின் நாயகன் என்று அழைக்க்ப்படும் இயக்குநர் ஷியாம் ராம்சே காலமானார். அவருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் துளசி என்ற திகில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் . அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து  பேய் படங்களை டைரக்டு செய்தார். புரானி கவேலி, ஹஸ்கிஹானா, தர்வாஜா உள்பட பல படங்களை இயக்கி வெற்றியும் பெற்றார்.
சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 67.

திகில் படங்களின் முன்னோடி என்று ஷியாம் ராம்சேவை அழைக்கின்றனர். இதுவரை 20 பேய் படங்களை டைரக்டு செய்துள்ளார். இவர் இயக்கிய அனைத்து திகில் படங்களும் வசூல் குவித்துள்ளன. சத்ருகன் சின்ஹா, பிருதிராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஷியாம் ராம்சே இயக்கத்தில் நடித்துள்ளனர். ஷியாம் ராம்சே மறைவுக்கு இந்தி நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com