முகப்புபாலிவுட்

வெளியானது சுஷாந்தின் 'Dil Bechara' - நெகிழ்ச்சியோடு வாழ்த்திய பிரபலங்கள்..!!

  | July 25, 2020 11:34 IST
Dil Bechara

துனுக்குகள்

 • முகேஷ் சாப்ரா இயக்கத்தில் ‘தில் பெச்சாரா' படத்தில் நடித்து முடித்தார்
 • அவரது ஏராளமான ரசிகர்களையும் பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 • இந்த படம் நேற்று OTT தளத்தில் வெளியானது, படம் பார்த்த பல பிரபலங்கள்
எம்.எஸ். தோனி : தி அன்டோல்டு ஸ்டோரி படப் புகழ் நடிகர் சுஷாந்த் கடைசியாக அறிமுக இயக்குநர் முகேஷ் சாப்ரா இயக்கத்தில் ‘தில் பெச்சாரா' படத்தில் நடித்து முடித்தார். இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சஞ்சனா சங்கி கதாநாயகியாகவும், சைஃப் அலிகான், மிலிந்த் குனாஜி, ஜாவேத் ஜாஃப்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே சுஷாந்த் கடந்த ஜூன் 14ம் தேதி தற்கொலை செய்து காலமானார் என்பது அனைவரும் அறிந்த ஒரு சோகச்செய்தி. இது அவரது ஏராளமான ரசிகர்களையும் பாலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 34 வயதான நட்சத்திரம் இதுபோன்ற விபரீத முடிவு எடுக்க காரணங்கள் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. மேலும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப்ப்பதிவு செய்யப்பட்டு, பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுவருகிறது.

இந்நிலையில் இந்த படம் நேற்று OTT தளத்தில் வெளியானது, படம் பார்த்த பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த படத்தை குறித்து தனது கருத்தை வெளியிட்ட பிரபல இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி "சுஷாந்த் ஏன் இப்படி செய்தாய்..? என்னால் இந்த படத்தை பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com