முகப்புபாலிவுட்

"பேர் கிரில்ஸ்-ன் Into The Wild" - "சிட்டியை" தொடர்ந்து களமிறங்கும் "பக்ஷிராஜன்"..!

  | September 01, 2020 11:55 IST
Into The Wild

துனுக்குகள்

 • Man Vs Wild, ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றபோதும் அந்த
 • அந்த வரிசையில் அண்மையில், உலக புகழ்பெற்ற தமிழ் பட நடிகர் சூப்பர் ஸ்டார்
 • தற்போது பேர் கிரில்ஸ் அவர்களுடன் இந்த Into The Wild நிகழ்ச்சியில்
Man Vs Wild, ஹாலிவுட் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றபோதும் அந்த நிகழ்ச்சிக்கும் அந்த  தொகுத்து வழங்கும் bear grylls-க்கும் உலக அளவிலும் தமிழிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் ‘wild life with PM Narendra Modi' என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. அது உலகம் முழுக்க மிகவும் பிரபலமானது. அதற்கும் முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர்களான மைக்கேல் பி. ஜார்டன், ஸாக் எஃப்ரான், பென் ஸ்டெல்லர் உள்ளிட்ட பலர் இது போன்ற வைல்டு லைஃப் நிகழ்ச்சியில் பேர் கிரில்ஸுடன் பங்குபெற்றுள்ளனர்.

அந்த அவ்ரிசையில் அண்மையில், உலக புகழ்பெற்ற தமிழ் பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த டாக்குமெண்டரியில் பங்குபெற்றார். இதற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரி 27ம் தேதி) துவங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியும் பெரிய அளவில் வெற்றிபெற்றது. இந்த படப்பிடிப்பின்போது பேர் கிரில்ஸ் சூப்பர் ஸ்டாரிடம் அவரது வயதை கேட்க '69' என்று சொல்லி சூப்பர் ஸ்டார் சிரித்ததும் ஒரு நிமிடம் பேர் கிரில்ஸ் அசந்துப்போனார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது பேர் கிரில்ஸ் அவர்களுடன் இந்த Into The Wild நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தியுள்ளார் பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார். அக்ஷய் குமார் தனது படங்களில் வரும் சண்டை காட்சிகளை டூப் இல்லாமல் தானே செயல்படுத்தும் திறன் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே பேர் கிரில்ஸ் அவர்களுடன் இணைந்து அக்ஷய் அவர்களும் சிறந்த முறையில் கலக்கியுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com