முகப்புபாலிவுட்

இந்தியாவின் முதல் சினிமா மியூசியம்-பிரதமர் மோடி திறக்கிறார்

  | January 18, 2019 19:00 IST
Narendra Modi

துனுக்குகள்

  • இந்தியாவில் முதல் முறையாக சினிமா மியூசியம் திறக்கப்படுகிறது
  • இதை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
  • 140 கோடியில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக இந்திய சினிமாவின் நூற்றாண்டு பயணத்தை குறிக்கும் வகையில் மும்பையில் தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்து நாளை உரை நிகழ்த்த இருக்கிறார் பிரதமர் மோடி. சுமார் ரூ.140 கோடியில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் வளர்ச்சியையும் வரலாற்றையும் சித்தரிக்கும் வகையில் இங்கு பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  மௌன பட காலத்திற்கு பிறகே  பேசும் படம் உருவானது, உலகப் போர் தாக்கம், பிராந்திய மொழி படங்களில் இருந்து புதிய சினிமா வரை பல்வேறு வரலாற்று  தொகுப்புகள் ஒன்பது பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், காந்தியும் சினிமாவும், குழந்தைகள் திரைப்பட அரங்கம், இந்திய சினிமாவில் படைப்பாற்றலும் டெக்னாலஜியும், பிராந்திய மொழி சினிமா ஆகிய நான்கு கருப்பொருள்களில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் 1896ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி திரைப்படம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. லூமியர் பிரதர்ஸ் சினிமேட்டோக்ராஃபி என்ற நிறுவனம் மும்பையில் இருந்த வாட்சன் விடுதியில் ஆறு சிறிய ஊமைப் படங்களைத் திரையிட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. மும்பை பெடரர் சாலையில் உள்ள 19ம் நூற்றாண்டு விக்டோரியா பங்களாவான குல்சன் மஹால் வளாகத்திலும் அதன் அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஐந்துமாடி கட்டிடத்திலும் இந்த  நிகழ்வு நடைபெறுகிறது.  

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்