முகப்புபாலிவுட்

உயிர்க்கொல்லி நோயில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகர்; ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி

  | April 03, 2019 17:01 IST
Irrfan Khan

துனுக்குகள்

  • . 'தி லஞ்ச் பாக்ஸ்' படத்தில் நடித்திருந்தார்
  • 'லைஃப் ஆஃப் பை படத்தில் இவரது நடிப்பு அதிகம் பேசப்பட்டது
  • பெரும் துயரத்தில் இருந்து வந்தவர் ரசிகர்களுக்கு நன்றி தெறிவித்தார்
பிரலபர பாலிவுட்  நடிகரான இர்ஃபான் கான் புற்று நோயில் இருந்து மீண்டு வந்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். 'தி லஞ்ச் பாக்ஸ்', 'லைஃப் ஆஃப் பை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழ் பெற்றவர். இவர் சமீபத்தில்  நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 
இந்நிலையில் அந்த நோய்க்கு தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டு வந்துள்ளார் இர்ஃபான் கான். இதனைத் தொடர்ந்து பூரண குணமடைந்த வந்திருக்கும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

''வெற்றி பெறுவதில் நாம் நேசிக்கப்படுவதை மறந்து விடுகிறோம். சோதனை காலங்களில் இது நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. எனது பாதத் தடங்களை இந்த வாழ்க்கையில் விட்டுச் செல்வதற்கு முன் உங்களது அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியுள்ளவனாக இருக்க  நான் கடமைப்பட்டுள்ளேன். அதுவே என்னை குணமடையத் தூண்டியது. நான் மீண்டும் உங்களுடன் பயணம் செய்ய இருக்கிறேன். எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்