முகப்புபாலிவுட்

“இது சுஷாந்துக்கான அன்பு மழை” திச் பெச்சாரா ட்ரைலர் சாதனைக்கு ஏ.ஆர். ரகுமான் ட்வீட்.!

  | July 08, 2020 21:23 IST
Dil Bechara

தில் பெச்சாரா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகிறது.

பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அன்று காலமானார். அவர் மனச்சோர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மறைவு இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும், சினிமா துறையில் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களிடையே தாக்கத்தையும் ஏற்படுத்தியது. மேலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் படி, பல கோணங்களில், விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அவரது கடைசி படம் வெளியிடத் தயாராகி வருகிறது. சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் ‘தில் பெச்சாரா'. இப்படத்தை அறிமுக இயக்குநர் முகேஷ் சாப்ரா இயக்கியுள்ளார். இதில் சஞ்சனா சங்கி கதாநாயகியாகவும், சைஃப் அலி கான் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

The Fault in our Stars எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அந்த ட்ரைலர் 24 மணி நேரத்திற்குள் உலகம் முழுவதும் மிகவும் விரும்பப்பட்ட டிரைலராக மாறியது. அவென்ஜர்ஸ்: தி எண்ட் கேம் திரைப்படத்தின் ட்ரைலரை விட அதிக லைக்குகள் பெற்ற ட்ரைலராக யூடியூப் தளத்தில் சாதனை படைத்துள்ளது.

இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் “இது சுஷாந்த் மற்றும் அவரது தில்பேச்சரா படத்துக்கு பொழியும் அன்பு மழை” என்று பதிவிட்டுள்ளார். தில் பெச்சாரா டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com