முகப்புபாலிவுட்

தாயின் பிரிவை என்னால் உணர முடிகின்றது - ஜான்வி கபூர்

  | March 08, 2020 09:42 IST
Janhvi Kapoor

துனுக்குகள்

 • உங்கள் இழப்பை உணர்கிறேன்' என்று பதிவிட்டார்
 • புகழின் உச்சம் தொட்டவர் தான் ஸ்ரீதேவி
 • இன்னும் அவருடைய நினைவில் இருந்து மீளமுடியவில்லை
சிவகாசியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தோன்றி, கதையின் நாயகியாக மாறி பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சம் தொட்டவர் தான் ஸ்ரீதேவி. இவர் அழகுக்கும் நடிப்புக்கும் நிகர் இவரே. கடந்த 2018ம் ஆண்டு எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார். தற்போது தனது அம்மா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அவருடைய நினைவில் இருந்து மீளமுடியவில்லை என்று நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்ரவரி 28ம் தேதி தனது தாயின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியின்போது தனது தாயோடு தன் குழந்தை பருவத்தில் எடுத்த, கறுப்பு - வெள்ளை புகைப்படத்தை அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, 'தினமும் உங்கள்  இழப்பை உணர்கிறேன்' என்று பதிவிட்டார் ஜான்வி கபூர். சுற்றுலா, படப்பிடிப்பு என்று அவர் பிஸியாக இருந்து வரும் நிலையம் தன்னால் தாயின் பிரிவை உணர முடிகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com