முகப்புபாலிவுட்

மலையாள ஹிட் ‘ஹெலன்’ ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்..!

  | August 03, 2020 21:49 IST
Helen

இந்த படத்தை போனி கபூர் Zee Studios உடன் இணைந்து தயாரிக்கவுள்ளார்.

நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமாவதற்கு முன்பே, அவரது அப்பா போனி கபூர் அவரை படங்களில் அறிமுகப்படுத்துவார் என்று பலர் நினைத்திருந்தனர். ஆனால் அவர் கரன் ஜோஹரின் ‘தடக்' திரைப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட்டு அவரை ஒரு சாத்தியமான நட்சத்திரமாக நிலைநிறுத்தியது.

7bsqa4r

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்' ஆந்தாலஜி படத்தில் நடித்தார். இப்போது, ரூஹி அஃப்ஸானா, தோஸ்தானா2, குஞ்சன் சக்ஸேனாவின் பையோபிக் ஆகிய படங்களில் கைவசம் வைத்துள்ளார்.

j8hi1jm8

இப்போது, அவர் தனது தந்தை நடிகர்-தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கடந்த ஆண்டு அன்னா பென் மற்றும் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டான் ‘ஹெலன்' படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை போனி கபூர் சமீபத்தில் வாங்கினார். இந்த படத்தின் மூலம் தான் திரையுலகில் அப்பாவும் மகளும் ஒன்றிணையவுள்ளனர்.

oggsf5rg

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் பாதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை போனி கபூர் Zee Studios உடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com