முகப்புபாலிவுட்

சல்மான் கான், பிரபு தேவாவுடன் ‘காதல்’ பரத்; வைரலாகும் ‘ராதே’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்..

  | September 02, 2020 16:17 IST
Bharath Niwas

இப்படம் சென்ற மே 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில், திறமைகள் இருந்தும் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் அளிக்கப்படாத, முன்னேற்றம் இல்லாத சில நடிகர்கள் உள்ளனர். கடுமையான உழைப்பு இருப்பினும் படங்களும் கதாப்பாத்திரங்களும் சரியாக அமையாமல் போவதை சினிமா துறையில் அதிகம் பார்க்கமுடிகிறது.

2003ம் ஆண்டு வெளியான சங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த பிரபலங்கள் பல. நடிகர் சித்தார்த், நகுல், பரத் நடிகை ஜெனிலியா மற்றும் இசையமைப்பாளர் தமன் என்று அந்த படத்தில் அறிமுகமான பலர் பின்னர் திரையுலையில் நல்ல நிலையில் உள்ளனர். இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் தன்னை முன்னிலை படுத்த நடிகர் பரத்திற்கு கிடைத்த வாய்ப்பு தான் அண்மையில் வெளியான 'காளிதாஸ்' திரைப்படம். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் என்றும் கூறலாம்.

இந்த 2020ம் ஆண்டில் தமிழ், மலையாளம் மாற்றும் ஹிந்தி என்று மூன்று மொழிகளில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார் பரத். அப்படி, தமிழில் ‘8', நடுவன் ஆகிய படங்களும், மலையாளத்தில் ‘6 ஹவர்ஸ்', க்ஷணம் மற்றும் ஹிந்தியில் ‘ராதே' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.

Beautiful throwback memories during “Radhe”

A post shared by Bharath (@bharath_niwas) on

சமீபத்தில் இப்படத்திலிருந்து சில அறிய புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக பரத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒர்க்அவுட் செய்யும் காட்சிகள் மற்றும் சல்மான் கான், பிரபுதேவா ஆகியோருட்டன் இருக்கும் புகைப்படங்களும் இருந்தன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

‘ராதே' திரைப்படம் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமாகும். இதில் பரத், மேகா ஆகாஷ், ஜாக்கி ஷ்ராஃப், திஷா படானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் சென்ற மே 22-ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com