முகப்புபாலிவுட்

இந்தியில் ரீ-மேக் ஆகும் 'கைதி'; கார்த்தி வேடம் இந்த பெரிய ஹீரோவுக்குத்தானாம்!?

  | February 12, 2020 14:19 IST
Actor Karthi

அமீரின் பருத்திவீரன் என்ற படத்தின் மூலன் கதாநாயகனாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார்

துனுக்குகள்

 • இந்தியில் ரீ-மேக் ஆகும் 'கைதி';
 • கார்த்தி வேடம் இந்த பெரிய ஹீரோவுக்குத்தானாம்!?
 • சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமா துறை சார்ந்த படிப்பினை படித்தார்
பொறியியல் துறையில் இயந்திரவியல் முடித்துவிட்டு, மேலும் வெளிநாட்டிற்கு சென்று அங்கு தொழிற்துறை சார்ந்த பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர் நடிகர் கார்த்திக் சிவகுமார். சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமா துறை சார்ந்த படிப்பினை படித்தார். பின்னர் இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து என்ற படத்தில் அவருடைய துணை இயக்குனராக பணியாற்றினார். 

இதன்பின் 2007ம் ஆண்டு வெளியான அமீரின் பருத்திவீரன் என்ற படத்தின் மூலன் கதாநாயகனாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார். இன்று வரை தனக்கான கதை களத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளனர். இந்நிலையில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான கதாநாயகன் தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தை தமிழில் தயாரித்திருந்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் ஹிந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர் ரித்திக் ரோஷன், கார்த்தி  கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com