முகப்புபாலிவுட்

'கஜோல் நல்லா இருக்காங்க' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜய்

  | March 31, 2020 17:19 IST
Kajol

துனுக்குகள்

 • பல ரசிகர்களை ஈர்த்தவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் கஜோல்
 • 1992ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில்
 • ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் முற்றிலும் மறுத்துள்ளார்
மின்சார கனவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அந்த ஒரே படத்தில் பல ரசிகர்களை ஈர்த்தவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் கஜோல். 1992ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் இருந்தாலும், சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று அளவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார் கஜோல். தமிழில் 2007ம் ஆண்டு மின்சார கனவு படத்தில் தோன்றியதற்கு பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து அசத்தினார். 

பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த காலத்திலேயே 1999ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்னை திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் 2008ம் ஆண்டுக்கு பிறகு வெகு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகிய கஜோல் தற்போது இணைய தொடர் ஒன்றில் நடித்து வந்தார். 

இந்நிலையில் அண்மையில் வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய கஜோல் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக செய்திகள் பரவியது. ஆனால் கஜோலின் கணவர் அஜய் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவின் மூலம் முற்றிலும் மறுத்துள்ளார். மேலும் அவர்கள் சிறந்த உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com