முகப்புபாலிவுட்

மீண்டும் சர்ச்சை புகார் கொடுத்த கங்கனா ரனாவத்…?

  | April 05, 2019 18:19 IST
Kangana Ranaut

துனுக்குகள்

 • தமிழில் தாம் தூம் படத்தில் இவர் நடித்திருந்தார்
 • ஜெயலலிதாவின் பயோ பிக்கில் இவர் நடிக்கிறார்
 • தலைவி படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார்
தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்' படத்தில் நடித்த கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் பயோ பிக் படத்தில் நடிக்கிறார். இந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
 
விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் பயோ பிக் படத்துக்கு தலைவி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்தியிலும் இப்படம் ஜெயா என்ற பெயரில் உருவாகிறது. இவர் கடந்த வருடம் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷன் மீது குற்றம் சாட்டியதுடன் காவல் நிலையத்தில் புகார்  ஒன்றை அளித்தார்.
 
அதன் பிறகு  வேறு எந்த பிரச்னையையும் அவர் தெரிவிக்கவில்லை இந்நிலையில் பிரபல  பாலிவுட் இயக்குனர் பஹலாஜ் நிஹலானி மீது புகார் கூறியிருக்கிறார். ‘ஐ லவ் யூ பாஸ்' இந்தி படத்தில் நடித்தபோது, உள்ளாடை அணியாமல் கயிறுகள் மட்டுமே கட்டிக்கொண்டு தன்னை போட்டோவுக்கு போஸ் கொடுக்க, இயக்குனர் நிஹலானி வற்புறுத்தியதாகவும், அது ஒரு வகையான ஆபாச படம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகார் தற்போது பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. ஆனால் 'ஐ லவ் யூ பாஸ்' படத்தின் இயக்குநர்  கங்கனாவின் புகாரை மறுத்திருக்கிறார்.
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com