முகப்புபாலிவுட்

சல்மான் கான் படத்தில் ப்ரியங்காவுக்கு பதில் கத்ரினா கைஃப்

  | July 30, 2018 17:52 IST
Bharat Movie Cast

துனுக்குகள்

  • இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • இந்த படத்தை அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கி வருகிறார்
  • முதலில், சல்மான் கானுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியிருந்தார்

பாலிவுட்டில் ‘ரேஸ் 3’ படத்திற்கு பிறகு சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படம் ‘பாரத்’. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் திஷா பதானி, தபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை ‘டி சீரீஸ் – ரீல் லைஃப் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏற்கெனவே, துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2019) ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

முதலில், இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகியிருந்தார். சமீபத்தில், நடிகை பிரியங்கா சோப்ரா இந்த படத்திலிருந்து விலகினார். தற்போது, பிரியங்காவின் கேரக்டரில் நடிக்க கத்ரினா கைஃப் கமிட்டாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்