முகப்புபாலிவுட்

பாலிவுட்டில் முதல் முறையாக அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்! அதுவும் போனிகபூர் தயாரிப்பில்!

  | August 19, 2019 17:05 IST
Keerthy Suresh

துனுக்குகள்

 • இந்த படத்தை அமித் ஷர்மா இயக்குகிறார்
 • இந்திய கால் பந்தாட்ட வீரர் அப்துல் ரஹி சாதனையை பேசும் இது
 • இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்
சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி இருக்கிறது.
 
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கனவர் போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் குமார் நடித்திருந்த ‘நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தை ஹெச்.வினோத இயக்கியிருந்தார். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இதற்கிடையில்  பாலிவுட்டில் போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
விளையாட்டு போட்டிகளில் சாதனைப் படைத்த வீரர்களின் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் திரைப்படங்களாவது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் பிரபல கால்பந்து வீரர் சயது அப்துல் ரஹிமின் பயோபிக்கும் உருவாகிறது. இப்படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘தேசிய விருது' வென்ற தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
 
ஹிந்தியில் ‘பதாய் ஹோ' என்ற படத்தை இயக்கிய அமித் ஷர்மா இப்படத்தை இயக்க போனி கபூர், ஆகாஷ் சவ்லா, அருணவ ஜாய் செங்குப்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் 1950-1963 வரை இந்திய கால்பந்து அணி படைத்த சாதனைகளை போற்றும் வகையில் உருவாகவுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்திற்கு படக்குழு ‘மைதான்' என தலைப்பிட்டுள்ளது. இந்திய கால்பந்து விளையாட்டின் பொன்னான காலம் என்பதை குறிப்பிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது என்பது கூடுதல் தகவல்.
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com