முகப்புபாலிவுட்

இவ்ளோ பெரிய செட்டா?? கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படம்!!!

  | March 09, 2019 15:53 IST
Keerthy Suresh

துனுக்குகள்

 • மகாநதி படத்தின் மூலம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ்.
 • தற்போது இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
 • நரேந்திரா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.
ரஜினி முருகன், தொடரி, ரெமோ, நடிகையர் திலகம், சர்கார் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  விக்ரம், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  மற்ற படங்களை காட்டிலும், இவர் நடித்த படங்களிலேயே ”நடிகையர் திலகம்” திரைப்படம்தான் இவருக்கான அங்கீகாரத்தை கொடுத்தது என்று சொன்னால் மிகையாகாது. 
 
தற்போது மலையாளத்தில் “மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்” என்ற படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  கீர்த்தி சுரேஷிற்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பும் அமைந்திருக்கிறது.  கால்பந்தாட்ட பயிற்சியாளரின் சுயசரிதை தான் கதை களம்.  அதுமட்டுமின்றி, தமிழ் மற்றும் தெலுங்கில், இயக்குநர் நரேந்திரா இயக்கத்தில் கதையின் நாயகியாக நடிக்கயிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் தேதி ஐதராபாத்திரத்திலுள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தொடங்கயிருக்கிறது.  இப்படத்திற்காக 7 ஏக்கரில் செட் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.  கூடுதல் தகவலாக, ஜுன் மாதத்திற்கு பின் படப்பிடிப்பு அமெரிக்காவில் துவங்கயிருக்கிறது என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com