முகப்புபாலிவுட்

‘கே.ஜி.எஃப்-2’ வில்லன் சஞ்சய் தத்துக்கு புற்றுநோய்.! சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்!

  | August 12, 2020 11:06 IST
Sanjay   Dutt Admitted In Hospital

சஞ்சய் தத் அடுத்ததாக ‘சடக் 2’ மற்றும் ‘கே.ஜி.எஃப்-2’ ஆகிய திரைப்படங்களில் காணப்படுவார்.

2020 பாலிவுட் திரையுலகிற்கு நல்ல ஒரு ஆண்டாக அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். இப்போது, அதிர்ச்சியளிக்கும் விதமாக, நடிகர் சஞ்சய் தத் மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. நடிகர் உடனடி சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு புறப்படுவார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் சினிமா ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, இந்த மோசமான தகவலை சஞ்சய் தத் தனது குடும்பத்திடம் உடைத்தபோது அவர் முற்றிலும் மனமுடைந்துவிட்டார் என்பதை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் அவரது மனைவி மன்யாட்டா மற்றும் குழந்தைகள் தற்போது துபாயில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகரின் நண்பர்களான அமிதாப் பச்சன், அபிஷேக், சல்மான் கான் போன்றவர்கள் செய்தியைக் கேட்டபின் அவரை விசாரிக்க ஆர்வத்துடன் அழைத்ததாகவும், ஆனால் அவர் யாருடைய அழைப்புகளை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ‘சடக்-2' படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னர் மருத்துவ சிகிச்சைக்கு ஓய்வு எடுப்பது குறித்து அவர் சமூக ஊடகங்களில் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த செய்தி வந்துள்ளது.

qmck7t2g

சஞ்சய் தத் மும்பை லிலாவதி மருத்துவமனையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மூச்சுத் திணறல் புகார் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவர் COVID-19 க்கு எதிர்மறையை சோதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதையடுத்து அவர் நன்றாக இருப்பதாகவும், சிறப்பாக செயல்படுகிறார் என்பதை வெளிப்படுத்த அவர் மற்றொரு ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 10-ஆம் தேதி சஞ்சய் தத் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சய் தத் அடுத்ததாக ‘சடக் 2' மற்றும் ‘கே.ஜி.எஃப்-2' ஆகிய திரைப்படங்களில் காணப்படுவார். சடக்-2 வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com