முகப்புபாலிவுட்

தயாராகிறதா `எம்.எஸ்.தோனி' படத்தின் இரண்டாம் பாகம்?

  | July 04, 2018 16:38 IST
Ms Dhoni : The Untold Story

துனுக்குகள்

  • தோனியின் பயோ பிக்காக உருவானது எம்.எஸ்.தோனி: த அன் டோல்ட் ஸ்டோரி
  • சுஷாந்த் சிங் ராஜ்புத் இதில் தோனியாக நடித்தார்
  • நீரஜ் பாண்டே இப்படத்தை இயக்கினார்
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையைத் தழுவி பயோபிக்காக உருவானது `எம்.எஸ்.தோனி: த அன்டோல்ட் ஸ்டோரி'. இப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியாக நடித்தார். `வெட்னஸ் டே' `ஸ்பெஷல் 26', `பேபி' போன்ற படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே இப்படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது எம்.எஸ்.தோனி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த பாகத்தில் 2011 உலக கோப்பை வென்றதற்குப் பிறகான தோனியின் பங்களிப்புகள், டி20யில் அவரின் செயல்பாடுகள், மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்வின் முக்கியத் தருணங்கள் ஆகியவை இடம் பெரும் என சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தை இயக்குவது யார் என விரைவில் சொல்லப்படும் என்றும், முந்தைய படமான `ராபதா' சுஷாந்த் சிங்கிற்கு மிகப் பெரிய தோல்வியைக் கொடுத்ததால் தோனி மூலம் தன் வெற்றியை திரும்பப் பெறும் ஆர்வத்தில் இருக்கிறார் என்றும் பாலிவுட் மீடியாக்கள் செய்திகள் போட்டபடி இருக்கிறது. இது பற்றிய அதிராகர்ப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்