முகப்புபாலிவுட்

ஷாருக்கான் படத்தில் நடிக்கும் மாதவன்

  | May 08, 2018 12:09 IST
Shah Rukh Khan Zero

துனுக்குகள்

 • இதில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார்
 • இப்படத்தில் கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம்
 • இந்த படத்தில் திரையுலக பிரபலங்கள் சிலர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்
பாலிவுட்டில் ‘JAB HARRY MET SEJAL’ படத்திற்கு பிறகு ‘பாலிவுட் பாட்ஷா’ ஷாருக்கான், ஆனந்த்.எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடத்தில் அபய் தியோல் நடிக்கிறார். ஷாருக்கான் குள்ள மனிதராக வலம் வரவுள்ளாராம். ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் – COLOUR YELLOW புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது

இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான் கான், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஸ்மா கபூர், ஜுஹி சாவ்லா, மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். தற்போது, இந்த கெஸ்ட் ரோல் பட்டியலில் நடிகர்கள் மாதவன், ஜிம்மி ஷெர்கில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை இந்தாண்டு (2018) கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com