முகப்புபாலிவுட்

“மணிகர்னிகா” திரைப்படத்திற்கு யார் உன்மையான இயக்குநர். புதிய சர்ச்சை

  | January 29, 2019 16:39 IST
Manikarnika

துனுக்குகள்

  • தமிழில் வானம் திரைப்படத்தை இயக்கியவர் கிரிஷ்
  • ஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்றை மணிகர்னிகா என்ற பெயரில் இயக்கினார்
  • கங்கணா ரனாவத் இப்படத்தில் நடித்திருந்தார்
தமிழில் வானம் திரைப்படத்தை இயக்கியவர் கிரிஷ். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படத்தையும் சமீபத்தில் இயக்கினார். இந்த படமும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இவர் ஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்றை மணிகர்னிகா என்ற பெயரில் இந்தியில் இயக்கி வந்தார் கிரிஷ். இதில் பிரபல இந்தி நடிகையும், தமிழில் தாம்தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவருமான கங்கணா ரனாவத், ஜான்சி ராணியாக நடித்திருக்கிறார். மணிகர்னிகா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிரிஷ் என்.டி.ஆர் படத்தை இயக்க ஒப்புக்கொண்டு அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.
 
அப்போது மணிகர்னிகா படத்தின் சில காட்சிகளை மீண்டும் எடுத்து தர கேட்டதற்கு கிரிஷ் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. கங்கணா ரனாவத் பெயர் இயக்குநராக போட்டுக்கொண்டது பற்றி கிரிஷ் கூறும்போது,
 
ஜான்சிராணி படத்தை கடந்த ஜூன் மாதமே முழுமையாக முடித்து கொடுத்து விட்டேன். எல்லோரும் டப்பிங் பேசினார்கள். கங்கணா ரனாவத் மட்டும் டப்பிங் பேசாமல் இருந்தார். பிறகு என்னிடம் தொடர்பு கொண்ட அவர், படத்தில் சில காட்சிகளை மாற்றி அமைத்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த கேட்டதுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சோனுவின் கதாபாத்திரத்தை இடைவேளைக்கு முன்பே கொல்வதுபோல் அமைக்க வேண்டும் என்றார்.
 
 
வரலாற்றுக்கு புறம்பான விஷயத்தை அவர் சொன்னதால் மறுத்துவிட்டேன். சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று என்னை கேட்ட போது நான் வேறு படத்தை இயக்குவதாக கூறிவிட்டேன். உடனே கங்கணாவே டைரக்டர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
 
மணிகர்னிகா படத்துக்காக என்னுடைய வாழ்நாளில் 400 நாட்களை செலவழித்துள்ளேன். கடுமையாக உழைத்துள்ளேன். அந்த படத்திற்கு  எனக்கு 30 சதவீதம் சம்பளம்தான் தரப்பட்டது.
 
முழுபடத்தையும் நான் முடித்த நிலையில், சில காட்சிகளை மட்டும் மீண்டும் படப்பிடிப்பு செய்த கங்கணா, இயக்குனர் என்று தனது பெயரை போட்டுக் கொள்வது எந்தவிதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்