முகப்புபாலிவுட்

‘ராட்சசன்’ ரீமேக்கில் விஷ்னு விஷால் கதாபாத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற ஹீரோ..!

  | December 06, 2019 17:08 IST
Ratsasan Hindi Remake

துனுக்குகள்

 • ராட்சசன் திரைப்படத்தை ‘முண்டாசுப்பட்டி’ ராம் குமார் இயக்கியுள்ளார்.
 • இப்படத்தில் விஷ்னு விஷால் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர்.
 • இப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
u0gn0e5g
விஷ்னு விஷால் நடித்த ‘ராட்சசன்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில், தேசிய விருது பெற்ற இளம் நடிகர் நடிக்கவுள்ளார்.

முண்டாசுப்பட்டி திரைப்படத்தை தொடர்ந்து விஷ்னு விஷால் மற்றும் இயக்குனர் ராம் குமார் காம்போவில் ‘ராட்சசன்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தில் அமலா பால், அம்மு அபிராமி, பேபி மோனிகா, முனீஸ்காந்த், நிழல்கள் ரவி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான வில்லன் கிரிஸ்டஃபராக சரவணன் நடித்திருந்தார்.

சைக்கொ த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வைரல் ஹிட்டானது. அதையடுத்து இப்படம் ‘ராக்‌ஷசடு' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீநிவாஸ் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக, இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்நிலையில், ராட்சசன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஷ்னு விஷால் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ள பாலிவுட் ஹீரோவின் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த இளம் நடிகர் ஆயுஷ்மான் குராணா தான் ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். அவர் ‘அந்தாதுன்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com