முகப்புபாலிவுட்

'அம்மாவுக்காக வேண்டிக்கோங்க' - தாயை கொரோனா டெஸ்டுக்கு அழைத்து செல்லும் பிரபல நடிகர்..!!

  | June 30, 2020 16:06 IST
Corona

துனுக்குகள்

 • இந்தியாவில் நேற்றை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக
 • எனது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில்
 • இந்நிலையில் தற்போது எனது அன்னை மட்டுமே இன்னும் சோதனை செய்யாமல்
இந்தியாவில் நேற்றை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 18,522 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 5,66,840 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், நேற்று ஒரு நாளில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 16,893 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, நேற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தளர்வு விதித்து அன்லாக் 2 குறித்த நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், கட்டுப்பட்டு மண்டலங்கள், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு எந்த தளர்வுகளும் வழங்கப்படவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஒரு தகவலை தனது சமூகவலைத்தளத்தில்  பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "எனது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் எங்களுது இடத்தை கிருமி நீக்கம் செய்தனர். அதன் பிறகு எங்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அது நெகடிவ் என்ற பதிலும் கிடைத்துவிட்டது. இந்நிலையில் தற்போது எனது அன்னை மட்டுமே இன்னும் சோதனை செய்யாமல் உள்ளார். தற்போது அவரை தொற்று சோதனைக்கு அழைத்துச்செல்கிறேன். நீங்கள் அவருக்காக பிராத்தனை செய்துகொள்ளுங்கள். மேலும் அனைவரும் கவனமாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்."
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com