முகப்புபாலிவுட்

மீண்டும் சல்மான் கானுடன் இணையும் பிரபு தேவா…!

  | April 02, 2019 13:08 IST
Dabangg 3

துனுக்குகள்

 • இவர் நடிப்பில் பொன்மாணிக்கவேல் திரைப்படம் வெளிவர இருக்கிறது
 • தேவி2 படத்தில் நடித்திருக்கிறார்
 • போக்கிரி படத்திற்கு பிறகு மீண்டும் இவர் இயக்கும் படம் இது
நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக திகழ்பவர் பிரபுதேவா.  இவர் தற்போது ‘தபாங்' படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

நடிகராகவும், நடன இயக்குநராகவும் இருந்தவர் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

இந்த படம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இந்தியில் சல்மான்கானை வைத்து மறுதயாரிப்பு செய்தார். இந்தியிலும் இந்த படத்திற்கு நல்லவரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் சல்மான் கானும் பிரபு தேவாவும் மீண்டும் ‘தபாங்' என்கிற படத்தில் இணையுவுள்ளனர். மூன்றாம் பாகமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது.
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com