முகப்புபாலிவுட்

“ஸ்ரீதேவியை தவறாக சித்தரிக்க மாட்டேன்” - இயக்குநர் பிரசாந்த் மாம்புலி

  | January 22, 2019 11:12 IST
Sridevi Bungalow

துனுக்குகள்

  • ஸ்ரீதேவி கடந்த ஆண்டு மரணம் அடைந்தார்
  • தமிழ்,தெலுங்கு,ஹிந்தி மொழி படங்களில் நடித்தவர்
  • ரஜினி,கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் தமிழில் நடித்தவர்

பாலிவுட் இயக்குநர் பிரசாந்த் மாம்புலி இயக்கியிருக்கும் “ஸ்ரீதேவி பங்களா” என தலைப்பிடப்பட்ட படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த படத்தில்  பிரியா வாரியர் நடித்திருக்கிறார். மேலும் டீசரில் படு கவர்ச்சியாகவும், குளியல் தொட்டியில் அவர் விழுந்து கிடப்பதாகவும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த காட்சிகளை கண்டு, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர போவதாக தெரிவித்திருந்தார்.

இதைப்பற்றி தற்போது பேசியிருக்கும் இயக்குநர் பிரசாந்த் மாம்புலி “ஒரு நடிகையின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறேன். முதலில் கங்கனாவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அவர் பிசியாக இருந்ததால் பிரியா வாரியரை தேர்வு செய்தேன். லண்டன் செல்லும் ஒரு நடிகையும் அங்கு நடக்கும் சம்பவங்களும்தான் படம்.

ஸ்ரீதேவி பெயரை பயன்படுத்தக்கூடாது என போனி கபூர்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பெயரை மாற்ற மாட்டேன் என சொல்லிவிட்டேன், அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. படத்தை பார்த்துவிட்டு அது ஸ்ரீதேவியின் படமா என்று முடிவு செய்யட்டும். நடிகை ஸ்ரீதேவியை மதிக்கிறேன், நிச்சயமாக அவரை தவறாக சித்தரிக்க மாட்டேன்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்