முகப்புபாலிவுட்

படு கவர்ச்சியில் பிரியா வாரியர்- நடிகை ஸ்ரீதேவி ட்ரைலரில் சர்ச்சை

  | January 18, 2019 12:35 IST
Priya Varrier

துனுக்குகள்

  • கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் இறந்தார்.
  • ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
  • ஸ்ரீதேவியின் கணவர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்
கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் அதிகம் தேடப்பட்டவர்களில் பிரியா வாரியரும் ஒருவர். கண் அடித்து தமிழ்நாட்டு இளைஞர்களை கொள்ளை கொண்ட நடிகை பிரியா வாரியார். அவர் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ஸ்ரீதேவி பங்களா. இந்த படத்தை பிரசாந்த்  மாம்பூலி இயக்கியுள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
 

ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார். தற்போது, வெளியான டீசரில் நடிகை பிரியா வாரியார் குளியல் தொட்டியில் இறந்து கிடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் கோபம் அடைந்ததுள்ளார்.
 
இயக்குநருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ஸ்ரீதேவி என்பது பொதுவான பெயர் என்றும் இதனை நான் முறைப்படி சந்திப்பேன் என இயக்குநர் கூறியுள்ளார்.
 
1 நிமிடமும் 49 வினாடியும் ஓடும்  ஸ்ரீதேவி பங்களா ட்ரைலர்  பிரியா வாரியர் படு கிளாமராக தோன்றுகிறார்.  டீசர் முடிவில்,  ஸ்ரீதேவியின் மர்ம மரணம் குறித்த குறிப்புகளைக் காட்டும் ஒரு குளியல் தொட்டியும் காட்டப்படுகிறது.இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு தற்போது அதிகரித்து இருக்கிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்