முகப்புபாலிவுட்

லாரன்ஸ் - அக்‌ஷய் கூட்டணியில் ‘லக்ஷ்மி பாம்’.! OTT வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

  | September 16, 2020 18:00 IST
Raghava Lawrence

இப்படத்தின் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இதனை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்

இயக்குநர்-நடிகர் ராகவா லாரன்ஸ் கடைசியாக ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் வேதிகா ஆகியோருடன் இணைந்து நடித்த காஞ்சனா 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, லாரன்ஸ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

ராகவா லாரன்ஸின் பாலிவுட் அறிமுகமான ‘லக்ஷ்மி பாம்' திரைப்படம்  2011-ல் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘காஞ்சனா'வின் ரீமேக் ஆகும். இதில் அக்‌ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2020 ஈகைத் திருநாளன்று அன்று வெளியிடப்பட திட்டமிட்டிருந்த இப்படம், கொரோனா வைரஸ் தொற்று பூட்டுதல் காரணமாக தடைபட்டுபோனது. இதற்கிடையில் ‘லக்ஷ்மி பாம்' திரைப்படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமைகள் ஹாட்ஸ்டாரால் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக சமீபத்தில் தெரியவந்தது.

கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துகொண்டே வருகையில், இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று நம்பமுடியாத சூழலில், நிறைய பாலிவுட் திரைப்படங்கள் நேரடி OTT வெளியீட்டைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில், ‘லக்ஷ்மி பாம்' திரைப்படமும் OTT-ல் வெளியிடுவதாக அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தனதி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த நடிகர் அக்‌ஷய், ‘லக்ஷ்மி பாம்' வரும் நவம்பர் 9-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் VIP-ல் வெளியாகிறது என அறிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் இயக்குநர் ராகவா லாரன்ஸும் இதனை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com