
இதில் சரத்குமார், லாரன்ஸ், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோர் நடித்து 2011–ல் வெளியாகி வசூல் குவித்த படம் காஞ்சனா. இதில் சரத்குமாரின் திருநங்கை கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்து லாரன்சே இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். அக்ஷய்குமார் ஜோடியாக கியாரா அத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சரத்குமாரின் திருநங்கை வேடத்தில் அமிதாப்பச்சன் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் காஞ்சனா படத்துக்கு ‘லட்சுமி' என்று பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு வருகிற 21–ந்தேதி தொடங்குகிறது.

காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தை லாரன்ஸ் தற்போது இயக்கி உள்ளார். இதில் ஓவியா, வேதிகா, நிக்கி கல்ராணி, கோவை சரளா, நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது.