முகப்புபாலிவுட்

"அக்‌ஷய் குமாரின் அடுத்த அவதாரம்" - 'லட்சுமிபாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  | February 13, 2020 16:20 IST
Lakshmi Bomb

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நாயகனாக நடித்து வருகிறார்.

துனுக்குகள்

  • பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நாயகனாக நடித்து வருகிறார்.
  • "அக்‌ஷய் குமாரின் அடுத்த அவதாரம்"
  • 'லட்சுமிபாம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆரம்ப காலகட்டத்தில் குரூப் டான்சராக களமிறங்கி தற்போது டான்சர் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என்று பல பரிமாணங்கள் எடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். தமிழில் ராஜ்கிரண், சரத்குமார் என்று பல முன்னணி நடிகர்களை கொண்டு இவர் தனது முனி மற்றும் அதன் அடுத்தடுத்த பாகங்களாக காஞ்சனா போன்ற படங்களை இயக்கி நடித்தார். முனி மற்றும் காஞ்சனா படங்களில் இதுவரை வெளியான எல்லா பாகங்களும் நகைச்சுவை, செண்டிமெண்ட் கலந்த திகில் படம் என்பதால் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றது.  

இந்நிலையில், லாரன்ஸ் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகும் லட்சுமிபாம் திரைப்படம் ஏறத்தாழ நிறைவுக் கட்டத்தை எட்டி வருகிறது. தமிழில் வெற்றி பெற்ற காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக்காக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் எந்திரன் 2.0 படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நாயகனாக நடித்து வருகிறார். தமிழில் சரத்குமார் நடித்த திருநங்கை கதாபாத்திரத்திலும் அக்ஷய்குமாரே  நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மே மாதம் 22ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்