முகப்புபாலிவுட்

கேன்சர் சிகிச்சைக்கு இடையில் படப்பிடிப்புக்கு வந்த சஞ்சய் தத்.! வைரலாகும் புகைப்படங்கள்..

  | September 09, 2020 12:00 IST
Sanjay Dutt

சஞ்சய் தத் சமீபத்தில் 90s படமான ‘சடக்’ திரைப்படத்தின் தொடர்ச்சியான ‘சடக் 2’ படத்தில் தோன்றினார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கடந்த மாதம் தெரியவந்தது. அவர் சிகிச்சைக்காக உடனடியாக அமெரிக்கா செல்வதாகவும் கூறப்பட்டது.

சஞ்சய் தத் தனது சமூக ஊடக பக்கத்தில் தனது உடல்நல சிகிச்சைக்காக வேலையில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் ஒரு குறிப்பை வெளியிட்டார். அவர் விரைவாக குணமடைய அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து சமூக ஊடகங்களில் பிரார்த்தனைகளும், திரைத்துறைச் சகோதரத்துவங்களிடமிருந்து வாழ்த்துக்களும் குவிந்தன.

h5sjqdlg

நடிகர் சஞ்சய் தத் கடந்த திங்கட்கிழமை மாலை மும்பையில் உள்ள யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவில் காணப்பட்டுள்ளார். தகவல்களின்படி, அவர் தனது வரவிருக்கும் படமான ‘ஷம்ஷெரா' படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. இப்படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

அவர் இரண்டு நாட்கள் படப்பிடிப்பைப் முடித்துவிட்டு, பிறகு அவர்  அடுத்தக் கட்ட சிகிச்சைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவை விட்டு வெளியே வரும்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.

9sotqvg

சஞ்சய் தத் சமீபத்தில் 90s படமான ‘சடக்' திரைப்படத்தின் தொடர்ச்சியான ‘சடக் 2' படத்தில் தோன்றினார். இதில் ஆலியா பட், பூஜா பட் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் நடித்திருந்தனர். இதை மகேஷ் பட் இயக்கியுள்ளார்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com