முகப்புபாலிவுட்

அருண் விஜய் கதாபாத்திரத்தில் சித்.! ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘தடம்’

  | February 27, 2020 14:18 IST

துனுக்குகள்

  • தடம் திரைப்படத்தை மகிழ் திருமேனி எழுதி இயக்கியுள்ளார்.
  • இப்படம் கடந்த ஆண்டு மார்ச்-1 வெளியானது.
  • இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான ‘தடம்' திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் உலகின் பல்வேறு இடங்களில் நடந்த நீதி மன்ற வழக்கை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த படத்தில் அருண் விஜய் இரட்டைவேடமிட்டு நடித்திருந்தார். கதாநாயகிகளாகத் தன்யா ஹோப்,  ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அருண் விஜய்க்குப் பெயர்ச் சொல்லும் படமாக அமைந்தது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, இப்படம் தெலுங்கில் ‘ரெட்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அருண் விஜயின் கதாபாத்திரத்தில் ராம் பொத்தினேனி நடிக்க, நிவேதா பெத்துராஜ், மாள்விகா சர்மா, அமிர்தா ஐயர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இப்படம் பாலிவுட்டிலும் ஒரு வலம் வரத் தயாராகவுள்ளது. ஆம், தடம் திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது. அதில் அருண் விஜய் கதாபாத்திரத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். இப்படத்தை வர்தன் கேட்கர் இயக்க பூஷன் குமார் மற்றும் முரத் கேட்கானி தயாரிக்கின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்