முகப்புபாலிவுட்

'என்னுடன் வீடியோ கால் பேசலாம்' - பேய் படம் எடுக்க சொல்லும் 'பாலிவுட் பாட்ஷா'

  | May 11, 2020 14:10 IST
Shah Rukh Khan

துனுக்குகள்

 • தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார். அதன் பிறகு பல
 • இன்று பாலிவூட் உலகின் பாட்ஷா என்று அழைக்கப்படுகிறார்
 • இந்த ஊரடங்கு காலத்தில் பிற நடிகர்களை போல இவரும் தன்னால்
உலக அளவில் இந்தியாவை பெருமைப்பட வைத்த பல மனிதர்களில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. 1980களின் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, தனது அயராத உழைப்பால் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார். அதன் பிறகு பல சவால்களை எதிர்கொண்டு 1992ம் ஆண்டு அண்மையில் மறைந்த ரிஷி கபூர் அவர்களின் நடிப்பில் வெளியான தீவானா என்ற படத்தின் மூலம் அறிமுக நாயகனாக களமிறங்குகிறார் அந்த நடிகர்.

Dil Aashna Hai, Baazigar, Kabhi Haan Kabhi Naa போன்ற பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திய அவர் இன்று பாலிவூட் உலகின் பாட்ஷா என்று அழைக்கப்படுகிறார். உலக அளவில் இந்தியாவை பெருமையடைய வைத்த அந்த மிகப்பெரிய நடிகர் தான் ஷாருக் கான். 

இந்த ஊரடங்கு காலத்தில் பிற நடிகர்களை போல இவரும் தன்னால் இயன்ற பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் தனது ட்விட்டர் தளத்தின் மூலம் தற்போது இவர் ஒரு அழகிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தன்னை வீடியோ காலில் சந்திக்க ஒரு வாய்ப்பினை ஒரு போட்டியின் மூலம் அறிவித்துள்ளார் ஷாருக் கான்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com