முகப்புபாலிவுட்

தற்கொலைக்கு முன் சிலவற்றை கூகுல் செய்த சுஷாந்த்.! போலீசார் வெளிட்ட அதிர்ச்சியூட்டும் விவரங்கள்..

  | August 04, 2020 19:40 IST
Sushant Singh  Rajput

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் “schizophrenia”, “Bipolar Disorder” மற்றும் “Painless Death” என்ற சொற்களை கூகிள் செய்ததாக மும்பை போலீசார் வெளிப்படுத்தியுள்ளனர்.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் இறப்பதற்கு முன் மரணம், மன நோய் தொடர்பான் சொற்களையும், அத்துடன் தனது பெயர் மற்றும் அவரது முன்னாள் மேலாளர் திஷா சாலியனின் பெயர் என பல சொற்களை கூகிள் செய்ததாக கூறப்படுகிறது. திஷா சாலியன் சுஷாந்த் மறைவுக்கு ஒரு வார்த்திற்கு முன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் ராஜ்புதட் கடந்த ஜூன் 14 அன்று மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் “schizophrenia”, “Bipolar Disorder” மற்றும் “Painless Death” என்ற சொற்களை கூகுல் செய்ததாக மும்பை போலீசார் வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி சில மணி நேரங்களில் அவர் தனது சொந்த பெயரையும், திஷா சாலியனின் பெயரையும் கூகுலில் தேடியதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் திஷா சாலியனின் மரணத்துடன் அவரது பெயர் இணைந்திருப்பதைக் கண்டபோது, சுஷாந்த் உணர்ச்சிவசப்பட்டுள்ளதாகவும். அவர் திஷாவை ஒரு முறை மட்டுமே சந்தித்தாகவும், திஷா யார் என்று அவர் தனது வழக்கறிஞரிடம் கூட கேட்டுள்ளார் என்றும் போலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்தில், சுஷாந்தின் மனநல மருத்துவர் ஒரு பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில், அவர் Bipolar Disorder-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மனநல மருத்துவரின் கூற்று குறித்து, போலிசார் மேலும் கூறுகையில், “அவருக்கு இருமுனை கோளாறு இருந்தது என்பது மேற்பரப்பில் வந்துள்ளது, அவர் சிகிச்சை பெற்று, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தார். அவரது மரணத்திற்கு என்ன சூழ்நிலைகள் வழிவகுத்தன என்பது எங்கள் விசாரணையில் தெரியவரும். தொழில்முறை போட்டியா, நிதி பரிவர்த்தனை பிரச்சனையா அல்லது உடல்நலக் கோளாரா என அனைத்து கோணங்களும் ஆராயப்படுகின்றன. அவரது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை தொழில்நுட்ப ஆதாரமாக எடுத்துள்ளோம், எல்லாவற்றையும் நாங்கள் பார்ப்போம்” என்று கூறியுள்ளனர்.

சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் சமீபத்தில் குற்றம் சாட்டினார். அவரது புகாரின் அடிப்படையில், ரியாவுக்கு எதிராக இபிகோ 341, 342, 380, 406, 420 மற்றும் 306 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com