முகப்புபாலிவுட்

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான் உட்பட 8 பேர் மீது வழக்கு.!!

  | June 17, 2020 14:34 IST
Sushanth Singh Rajput

சல்மான் கான், இயக்குநர் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, சஜித் நதியாட்வாலா உள்ளிட்ட 8 திரைப்பட பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரயுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுஷாந்தின் உடல் மும்பையில் உள்ள அவரது பாந்த்ரா இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 34 வயதான இந்த நட்சத்திரம் தற்கொலை செய்து கொள்வார் என்று யாராலும் நம்ப முடியவில்லை என்றே, இரங்கல் தெரிவித்துவரும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, தூக்கிலிடப்பட்டதால் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கு முன்னதாக எந்தவித மோசமான தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தாய்மாமனும், மைத்துனரான காவல்துறை ஏ.டி.ஜி மற்றும் ஹரியானா முதல்வர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி ஓ.பி. சிங், அவர்து மறைவில் சந்தேகம் இருப்பதாகவவும், சுஷாந்த் தனது உயிரையே மாய்த்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தற்கொலையின் பின்னணியில், பாலிவுட்டின் பைஜான் என்று அழைக்கப்படும் சல்மான் கான், இயக்குநர் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, சஜித் நதியாட்வாலா உள்ளிட்ட 8 திரைப்பட பிரமுகர்கள் இருப்பதாக, அவர்கள் மீது பீஹாரில் உள்ள முசாபர்பூரின் சிஜிஎம் நீதிமன்றத்தில் சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

அவர்கள் அனைவருமே சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐபிசியின் 306, 109, 504 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு ஜூலை 3-ஆம் தேதி  நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிறது.

சுஷாந்தின் மரணத்தில் ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். நேற்று, தலைநகர் உட்பட பாட்னாவிலும் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com