முகப்புபாலிவுட்

சுஷாந்த் மரணம் பற்றிய படம்! ‘Suicide or Murder’ என தலைப்பு; விவரம் உள்ளே..

  | July 21, 2020 20:08 IST
Sushant Singh Rajput

இந்த படம் நெப்போடிஸம் மற்றும் பாலிவுட் மாஃபியாவை ஆராயும் என்று கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14 அன்று தற்கொலை செய்து கொண்டார். இது அவரது ஏராளமான ரசிகர்களையும் பாலிவுட் உட்பட ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 34 வயதான நட்சத்திரம் தீவிர நடவடிக்கை எடுக்க காரணங்கள் குறித்து பெரும் விவாதம் எழுந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பல கோணங்களில் விசாரணை நடத்தப்படுவருகிறது.

இப்போது ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு புதிய பாலிவுட் திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்தின் இந்த சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்துக்கு ‘Suicide or Murder' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

0hq5q608

இது சுஷாந்தின் பெயரில் பணம் சம்பாதிப்பதற்கான முயற்சி அல்ல, ஆனால் பாலிவுட் ஒரு சிண்டிகேட் மூலம் எவ்வாறு இயங்குகிறது என்பதை மக்களுக்கு நிரூபிக்க எடுக்கப்படும் படம் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளனர். போஸ்டரில் காணப்படும் சச்சின் திவாரி இந்த படத்தில் அறிமுகமாகிறார். மேலும் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டுள்ளார். Tik Tok-ல் சுஷாந்த் lookalike என்று அறியப்பட்டவர்.

தற்போது படக்குழு ஸ்கிரிப்டை இறுதி செய்வதற்கான முனைப்பில் உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு அவர்கள் மும்பை மற்றும் பஞ்சாபில் 50 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்தவுள்ளதாகவும் தயாரிப்பாளர் விஜய் சேகர் தெரிவித்துள்ளார். இந்த படம் நெப்போடிஸம் மற்றும் பாலிவுட் மாஃபியாவை ஆராயும் என்று கூறப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com