முகப்புபாலிவுட்

சுஷாந்த் சிங்கின் ‘தில் பெச்சாரா’ பாடல் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ஆர்.!

  | July 09, 2020 23:07 IST
Dil Bechara

"Dil Bechara Title Track பாடல் நாளை மதியம் 12 மணிக்கு காத்திருங்கள்!”

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்னர் காலமானார். அவரது இழப்பின் வேதனைக்கு மத்தியில், ரசிகர்கள் அவரது கடைசி திரைப்படமான ‘தில் பெச்சாரா' வெளியீட்டை நேரடியாக OTT தளத்தில் காண உள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் முகேஷ் சாப்ரா இயக்கியுள்ளார். இதில் சஞ்சனா சங்கி கதாநாயகியாகவும், சைஃப் அலி கான் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். The Fault in our Stars எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

மேலும், ஜூலை 24-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடி OTT வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இப்போது, ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய இப்படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், இந்த பாடலின் வீடியோ கிளிப்பைப் பகிர்ந்தார். அதில் “Dil Bechara Title Track என்பது மான்னியின் உயிரோட்டமான ஆத்மாவின் பிரதிபலிப்பாகும், மேலும் கிசியின் வாழ்க்கையை நம்பிக்கையுடனும் அன்புடனும் பிரகாசமாக்கும் விதம். பாடல் நாளை மதியம் 12 மணிக்கு காத்திருங்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com