முகப்புபாலிவுட்

"உங்களை மகிழ்விக்க அனுமதித்தற்க்கு நன்றி" - ட்விட்டரில் நெகிந்த 'பாலிவுட் பாட்ஷா'..!!

  | June 28, 2020 15:33 IST
Shahrukhkhan

துனுக்குகள்

 • உலக அளவில் இந்தியாவை பெருமைப்பட வைத்த பல மனிதர்களில் முக்கிய பங்கு
 • Dil Aashna Hai, Baazigar, Kabhi Haan Kabhi Naa போன்ற பல படங்களில்
 • பல ஆண்டுகளாக உங்களை மகிழ்விக்க என்னை அனுமதித்தற்கு நன்றி
உலக அளவில் இந்தியாவை பெருமைப்பட வைத்த பல மனிதர்களில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. 1980களின் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கி, தனது அயராத உழைப்பால் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு பெற்றார். அதன் பிறகு பல சவால்களை எதிர்கொண்டு 1992ம் ஆண்டு அண்மையில் மறைந்த ரிஷி கபூர் அவர்களின் நடிப்பில் வெளியான தீவானா என்ற படத்தின் மூலம் அறிமுக நாயகனாக களமிறங்குகிறார் அந்த நடிகர்.

Dil Aashna Hai, Baazigar, Kabhi Haan Kabhi Naa போன்ற பல படங்களில் நடித்து தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திய அவர் இன்று பாலிவூட் உலகின் பாட்ஷா என்று அழைக்கப்படுகிறார். உலக அளவில் இந்தியாவை பெருமையடைய வைத்த அந்த மிகப்பெரிய நடிகர் தான் ஷாருக் கான். 

இந்த ஊரடங்கு காலத்தில் பிற நடிகர்களை போல இவரும் தன்னால் இயன்ற பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "எனது ஆர்வம் எப்போது எனது நோக்கமாகி, பின்னர் எனது தொழிலாக மாறியது என்பது எனக்கு தெரியவில்லை. பல ஆண்டுகளாக உங்களை மகிழ்விக்க என்னை அனுமதித்தற்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் இதை தொடர்ந்து செய்வேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிடுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com