முகப்புபாலிவுட்

'சுஷாந்த் நடிப்பில் Dil Bechara' - இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்ட ஆல்பம்..!!

  | July 14, 2020 10:09 IST
Dil Bechar Album

துனுக்குகள்

 • இந்த ஆண்டு குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் பல திரைப்பிரபலன்கள்
 • மேலும் ரசிகர்களுக்காக 'Dil Bechara' படத்தின் ஆல்பம் தற்போது வெளியாகி
 • இசை புயலே அதை தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு குறிப்பாக இந்த லாக் டவுன் காலத்தில் பல திரைப்பிரபலன்கள் இந்த உலகை விட்டு மறைந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் சுஷாந்த் சிங் என்ற அந்த அருமையான நடிகரின் (தற்கொலை) மரணம் அவர் ரசிகர்கள் மட்டும் இன்றி பலரை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல. பெயர் புகழ் என்று எல்லாம் இருந்தபோதும் அவர் தற்கொலை செய்துகொண்டது திரையுலகில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மரணத்திற்கு பல காரணங்கள் கூறினாலும் மாண்டவர் திரும்புவதில்லை என்பதே நிதர்சனம். 

இந்நிலையில் அவருடைய நடிப்பில் கடைசியாக உருவான 'Dil Bechara' என்ற திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு இசைப்புயல் ரகுமான் அவர்களால் வெளியிடப்பட்டது. கேன்சர் பாதித்துள்ள ஒரு பெண்ணுக்காக அவளோடு இணைந்து போராடும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். 

மேலும் இசைப்புயல் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த படத்தின் டைட்டில் ட்ராக் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசை மற்றும் குரலில் அட்டகாசமாய் உருவாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது Dil Bechara-வின் டைட்டில் ட்ராக் பாடல். மேலும் ரசிகர்களுக்காக 'Dil Bechara' படத்தின் ஆல்பம் தற்போது வெளியாகி உள்ளது. இசை புயலே அதை தற்போது வெளியிட்டுள்ளார்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com