முகப்புபாலிவுட்

சன்னி லியோனை யார் என்று கேட்ட நபர்..!! யாரப்பா நீ..?

  | November 21, 2019 16:55 IST
Sunny Leone

துனுக்குகள்

  • சன்னி லியோன் ஒரு விளம்பர மாடல் மற்றும் நடிகையாவார்.
  • அவர் தற்போது பாலிவுட்டில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
  • அவர் தமிழில் வெளியாகவுள்ள வீரமாதேவி எனும் படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை சன்னி லியோனிடம் பெயர் என்ன, ஊர் எது எனக் கேட்கும் நபரின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சன்னி லியோன் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தனது கால்பந்து திறன்களைக் காட்டும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். 38 வயதான அவர் முன்னதாக ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் பட ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கும் ‘வீரமாதேவி' எனும் படத்திலும் நடித்துள்ளார். உலகம் முழுக்க இவரைப்பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, பல காலமாக google-ல் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்ற பெருமையும் கொண்டுள்ளார்.

நடிப்பு, மாடலிங் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர் சன்னி. அவர் டெல்லி புல்ஸ் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். அந்த அணியை ஆதரிப்பதற்காக அபுதாபியில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்து கொண்டிருந்தார், அப்போது ஒரு கிளிப்பில் தனது கால்பந்தாட்டத் திறமையை வெளிப்படுத்தினார்.
தனது இன்ஸ்டாகிராமில் கோல்போஸ்டில் பந்தை ஷூட் செய்யும்  அந்த வீடியோவை "என் பெயர் என்ன..என் பெயர் என்ன?" என்று வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் டெல்லி புல்ஸ் ஜெர்சி, டெனிம் குட்டைப்பாவாடை மற்றும் வெள்ளை நிற ஷூக்களை அணிந்திருந்தார்.

ஒருபக்கம் அவர் விளையாடியதைப் பார்த்த ரசிகர்கள், அந்த வீடியோவில் பின்னால் ஒருவர் சன்னி லியோனிடம் “உங்கள் பெயர் என்ன..? நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா..? நீங்கள் இந்தியரா..?” என்று கேட்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அந்த அடையாளம் தெரியாத நபர் கேட்பதற்கு, விளையாடியபடியே கனிவாக பதிலும் அளித்துள்ளார் சன்னி. அந்த நபர் அப்படி கேட்டதாலேயே இன்ஸ்டாகிராம் பதிவில் "என் பெயர் என்ன..என் பெயர் என்ன?" என்று எழுதியுள்ளார்..  இந்த பதிவைப் பார்த்த பலரும், அவர் விளையாடியதைப் பாராட்டியதோடு, அவரின் பேரைக் கேட்ட நபரையும் ‘யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய்' என நகைத்து வருகின்றனர்.
 


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்