முகப்புபாலிவுட்

53-வது பிறந்தநாளை கொண்டாடும் அக்‌ஷய்; ‘பெல் பாட்டம்’ புதிய போஸ்டர் வெளியீடு..

  | September 09, 2020 15:09 IST
Akshay Kumar

அவர் ஏவியேட்டர் கண்ணாடி மற்றும் மீசையுடன் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார்.

இன்று அக்‌ஷய் குமாரின் 53-வது பிறந்தநாளில், ‘பெல் பாட்டம்' தயாரிப்பாளர்கள் படத்தில் அவரது புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். இந்த கிரேஸ்கேல் புகைப்படத்தில், அக்ஷய் ஒரு விமானத்தின் முன் நிற்பதைக் காணலாம். அவர் ஏவியேட்டர் கண்ணாடி மற்றும் மீசையுடன் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார்.

இந்த புதிய போஸ்டரை நடிகை வாணி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்திலிருந்து அக்‌ஷய் குமாரின் சக நடிகர்களும் அவரது புதிய தோற்றத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பெல் பாட்டம் தற்போது ஸ்காட்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அக்‌ஷய் குமாருடன், வாணி கபூர், லாரா தத்தா, ஆதில் ஹுசைன் மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ரஞ்சித் எம் திவாரி இயக்குகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com